×

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் தரிசனத்துக்கு ரூ.1000 வாங்குவதாக அவதூறு பாஜ பிரமுகர் மீது புகார்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா, கடந்த 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (18ம் தேதி) மாலை நடக்கிறது. சூரசம்ஹாரத்தை காண நேற்று அதிகாலை முதலே கார், வேன், அரசு, தனியார் பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் மூலமாகவும், பாதயாத்திரையாகவும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவியத் தொடங்கினர்.

ஏற்கனவே திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட 21 தற்காலிக கூடாரங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வரும் நிலையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர். இதற்கிடையே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பணியாளர்கள், கந்தசஷ்டி திருவிழாவில் பக்தர்களிடம் ரூ.1000 பணம் பெற்று தரிசனத்துக்கு அனுமதிப்பதாக வீடியோ ஒன்று கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த புகாரில் ஆயிரம் ரூபாய் கட்டண தரிசன வரிசையில் கோயில் பணியாளர், சிறப்பு அலுவலர் கட்டண சீட்டு வழங்குவதை முற்றிலும் மறைத்து, சிறப்பு தரிசன டிக்கெட் வழங்குவதை காட்டாமல் கோயில் பணியாளர் பணம் பெறுவதை மட்டுமே வீடியோ எடுத்து தமிழ்நாடு அரசு மற்றும் கோயில் நிர்வாகத்தின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்ற வகையில் வீடியோ பரப்பியதாக பாஜ பிரமுகர் மீது இந்துசமய அறநிலையத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் கூறியுள்ளார்.

The post திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் தரிசனத்துக்கு ரூ.1000 வாங்குவதாக அவதூறு பாஜ பிரமுகர் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Surasamharam darshan ,Tiruchendur ,Gandashashti festival ,Tiruchendur Subramania Swamy Temple ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...